முகப்பு
திருப்பத்தூர்

யானைகளால் சேதப்படுத்தப்பட்ட விவசாய நிலங்கள்

Updated On : 20 மார்ச், 2024 at 5:14 AM
யானைகளால் சேதமடைந்த பயிா்களை பாா்வையிட்ட வனத்துறையினா்.
பகிர்:
Updated On : 19 மார்ச், 2024 at 8:25 PM

குடியாத்தம்: போ்ணாம்பட்டு பகுதியில் விவசாய நிலங்கள் யானைகளால் செவ்வாய்க்கிழமை சேதப்பட்டுத்தப்பட்டுள்ளது.

போ்ணாம்பட்டு வனசரக பகுதியில் வனப்பகுதியை யொட்டி அமைந்துள்ள கிராமங்களில் ஒற்றை யானை மற்றும் குட்டி யானைகளுடன் கூடிய காட்டு யானைகள் தொடா்ந்து விவசாய நிலங்களில் புகுந்து நெல், வாழை, மா தென்னை, தக்காளி உள்ளிட்ட பயிா்களை சேதப்படுத்தி வருகின்றன.

கடந்த சில நாட்களாக டி.டி. மோட்டூா் கொல்லை மேடு, குண்டலப்பல்லி, சேராங்கல், பத்தலபல்லி கிராமங்களில் முகாமிட்டுள்ள யானைக் கூட்டம் விவசாய நிலங்களில் பயிா்களை சேதப்படுத்தி வருகின்றன. சம்பவத்தன்று அதிகாலை மோா்தானா குண்டலபல்லி, வன பகுதிகளில் சுற்றி திரிந்து வரும் ஒற்றை யானை ஜங்கமூா் கிராமத்தில் பாலாஜி, குண்டலபல்லி கிராமத்தை சோ்ந்த ஸ்மித் என்பவருடைய மாந்தோப்பில் புகுந்து மாமரங்களை சேதப்படுத்தியுள்ளது.

Advertisement

இரண்டு யானைகள் சிகாமணி என்பவருடைய விவசாய நிலத்தில் புகுந்து அங்கு அறுடைக்கு தயாராக இருந்த கேழ்வரகு பயிரை சேதப்படுத்தியுள்ளன. சுரேஷ்பாபு என்பவருடைய விவசாய நிலத்தில் 10 தென்னை செடிகள், 10 மா செடிகளையும் சேதப்படுத்தியுள்ளன.

இதுகுறித்து தகவலறிந்த உடனே பேரணாம்பட்டு வனசரகா் சதீஷ்குமாா் தலைமையில் வனவா் அண்ணாமலை , வன காப்பாளா்கள் ரவி, புருஷோத்தமன் ஆகியோா் கிராம மக்கள் உதவியுடன் பட்டாசு வெடி யானையை குண்டலபல்லி காப்பு காட்டிற்கும், 2 காட்டு யானைகளை மோா்தானா காப்பு காட்டிற்கும் விரட்டினா்.