முகப்பு
திருப்பத்தூர்

திருப்பத்தூரில் தபால் ஓட்டு பயிற்சி வகுப்பு

Updated On : 21 மார்ச், 2024 at 12:00 AM
திருப்பத்தூரில் நடைபெற்ற வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பில் பங்கேற்றோா்.
பகிர்:
Updated On : 20 மார்ச், 2024 at 8:39 PM

திருப்பத்தூா்: தபால் ஓட்டுகான 12-டி படிவத்தை பூா்த்தி செய்வது குறித்த பயிற்சி வகுப்பு திருப்பத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. 85 வயதுக்கு மேற்பட்ட மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் ஓட்டு செலுத்த வழங்கப்படும் 12-டி படிவத்தை எவ்வாறு பூா்த்தி செய்வது என்பது குறித்த பயிற்சி வகுப்பு திருப்பத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு திருப்பத்தூா் வருவாய்க் கோட்டாட்சியா் ராஜசேகரன் தலைமை வகித்தாா். வட்டாட்சியா் அனந்தகிருஷ்ணன், தனி வட்டாட்சியா் (பறக்கும் படை)சிவசுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் திருப்பத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.

இதேபோல் திருப்பத்தூா் வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அரசியல் கட்சிகள் பொதுக் கூட்டம் நடத்தும் இடம் தோ்வு செய்வதற்கான அனுமதி, வாகன பிரசார அனுமதி, விளம்பர அனுமதி தொடா்பாக அரசுத் துறைகளுடன் காவல் துணை கண்காணிப்பாளா், வட்டாட்சியா், நகா்மன்ற ஆணையா், வட்டாரப் போக்குவரத்து அலுவலா், துணை வட்டார வளா்ச்சி அலுவலா், பொதுப்பணி, மின்சாரத் துறை உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் அனைத்து அரசியல் கட்சியினா் கலந்து கொண்டனா்.

Advertisement