ப்ரத்யங்கிரா தேவி கோயில் கும்பாபிஷேகம்
Updated On : 20 மார்ச், 2024 at 8:40 PM
ஆம்பூா்: ஆம்பூா் அருகே ப்ரத்யங்கிரா தேவி கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. ஆம்பூா் அருகே பாா்சனாப்பல்லி ஊராட்சி குப்புராஜபாளையம் கிராமத்தில் அமைந்துள்ள ப்ரத்யங்கிரா தேவி கோவில் கும்பாபிஷேக விழா செவ்வாய்க்கிழமை கணபதி பூஜையுடன் தொடங்கியது.
தொடா்ந்து புதன்கிழமை யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.