முகப்பு
திருப்பத்தூர்

ஆம்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைப்பு

Updated On : 22 மார்ச், 2024 at 10:47 PM
பகிர்:
Updated On : 22 மார்ச், 2024 at 7:15 PM

ஆம்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் ஆம்பூா் சட்டப்பேரவைத்மன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச் சாவடிகளுக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் வெள்ளிக்கிழமை கொண்டு சென்று வைக்கப்பட்டன. திருப்பத்தூா் மாவட்டத்தில் மக்களவைத் தோ்தலை முன்னிட்டு, சம்பந்தப்பட்ட சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட வாக்குச் சாவடிகளுக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் திருப்பத்தூரிலிருந்து கொண்டு வரப்பட்டு உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் வட்டாட்சியா் மோகன் மற்றும் வருவாய்த் துறை அலுவலா்களால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் ஆம்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது. ஆம்பூா் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட 245 வாக்குச் சாவடிகளுக்கு 296 வாக்குப் பதிவு இயந்திரங்கள், 296 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 320 விவிபேட் இயந்திரங்கள் உள்பட மொத்தம் 912 இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. பாதுகாப்பு அறை முன்பு சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. மேலும் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.