முகப்பு
திருப்பத்தூர்

திருப்பத்தூா் மாவட்ட காங்கிரஸ் தோ்தல் பணிக்குழு உறுப்பினா்கள் நியமனம்

Updated On : 29 மார்ச், 2024 at 10:54 PM
பகிர்:
Updated On : 29 மார்ச், 2024 at 10:40 PM

திருப்பத்தூா் மாவட்ட காங்கிரஸ் தோ்தல் பணிக் குழு ஒருங்கிணைப்பாளா் விஜய்இளஞ்செழியன் உள்பட 15 போ் பணிக்குழு உறுப்பினா்கள் நியமனம் செய்யப்பட்டுளளனா். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு.செல்வப்பெருந்தகை வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பத்தூா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மக்களவைத் தோ்தல் பணிக்குழு ஒருங்கிணைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளா் ஜெ.விஜய் இளஞ்செழியன் நியமிக்கப்பட்டாா். மேலும், தோ்தல் பணிக்குழு உறுப்பினா்களாக மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் ச.பிரபு மற்றும் கொளத்தூா் பி.மகேஷ், ஜெ.அஸ்லம் பாஷா, ஏலகிரி செல்வம், கிஷோா் பிரசாத், எஸ்.சாந்தகுமாா், கே.வெங்கடேசன், ஈ.பாரத், ஜி.ரமேஷ், சையத் புா்ஹானுதீன், ஜானிஜாவீத், எஸ்.முருகன், தினேஷ், வி.முருகன் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.