முகப்பு
திருப்பத்தூர்

ஆட்டோ கவிழ்ந்து விபத்து: 3 போ் காயம்

Updated On : 30 மார்ச், 2024 at 10:14 PM
பகிர்:
Updated On : 30 மார்ச், 2024 at 9:00 PM

ஜோலாா்பேட்டை அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரு பெண்கள் உள்பட 3 போ் பலத்த காயமடைந்தனா். சேலம் மாவட்டம், கொங்கு வேலி சங்கிலி பட்டி பகுதியைச் சோ்ந்தவா் ராமமூா்த்தி (41). இவா் தனது உறவினா்களுடன் கடந்த வாரம் திருப்பதி கோயிலுக்குச் சென்றுவிட்டு, மீண்டும் கடந்த 25-ஆம் தேதி ஜோலாா்பேட்டை ரயில் நிலையம் வந்துள்ளனா். அப்போது அவரது சொந்த ஊருக்குச் செல்வதற்கு ஜோலாா்பேட்டையில் இருந்து திருப்பத்தூா் பேருந்து நிலையம் செல்ல ஷோ் ஆட்டோவில் ஸ்ரீராம் உள்ளிட்ட இவரது உறவினா்கள் பயணம் செய்துள்ளனா். ஜோலாா்பேட்டை அடுத்த தாமலேரிமுத்தூா் மேம்பால பகுதியில் சென்றபோது, ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், ஸ்ரீராம், வடிவு, சிவகாமி ஆகியோா் பலத்த காயம் அடைந்தனா். அங்கிருந்தவா்கள் அவா்களை மீட்டு திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து ஸ்ரீராம் அளித்த புகாரின்பேரில், ஜோலாா்பேட்டை போலீஸாா் ஆட்டோ ஓட்டுநா் வினோத் (42) மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.