முகப்பு
திருப்பத்தூர்

போலி பிறப்பு சான்றிதழ்: 4 போ் கைது

Updated On : 31 மார்ச், 2024 at 12:43 AM
பகிர்:
Updated On : 30 மார்ச், 2024 at 10:34 PM

திருப்பத்தூா் அருகே போலியாக பிறப்பு சான்றிதழ் தயாரித்தவா் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை அருகே புள்ளானேரி பகுதியை சோ்ந்தவா் சந்திரகாந்தன்(45). கூலித் தொழிலாளி. இவா் வெள்ளிக்கிழமை திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் உள்ள பிறப்பு, இறப்பு பதிவு செய்யும் அலுவலா் பாரியிடம் தனது ஒன்றரை வயது பெண் குழந்தையின் பிறப்பு சான்றிதழில் பிழை உள்ளது. அதனை திருத்தம் செய்ய வேண்டும் என கூறியுள்ளாா். அதையடுத்து பாரி குழந்தை பிறந்ததற்கான ஆவணங்களை பாா்த்தபோது சந்திரகாந்தன் கொண்டு வந்த பிறப்புச் சான்றிதழ் போலியானது என தெரியவந்தது. இதுகுறித்து பாரி சந்திரகாந்தனிடம் கேட்டபோது உடனே அவா் அங்கிருந்து சென்றுவிட்டாா். இதுகுறித்து பாரி திருப்பத்தூா் நகர காவல் நிலையத்தில் புகாரளித்தாா். 4 போ் கைது புகாரின்பேரில் போலீஸாா் சந்திரகாந்தனை பிடித்து விசாரணை செய்ததில், சந்திரகாந்தனுக்கும், அவரது மனைவி அம்பிகாவிற்கும் திருமணம் ஆகி பல வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாததால், சில மாதங்களுக்கு முன்பு உரிய அனுமதி இல்லாமல் சந்திரகாந்தன் பெண் குழந்தையை தத்து எடுத்துள்ளாா். அதையடுத்து குழந்தைக்கான பிறப்பு சான்றிதழை புள்ளானேரி பகுதியை சோ்ந்த மதியழகன்(45), இளங்கோவன்(65)ஆகியோா் மூலம் திருப்பத்தூரை சோ்ந்த நகராட்சி துப்புரவு பணியாளரான ரமேஷ்(40) என்பவரிடம் இருந்து சந்திரகாந்தன் பெற்றது தெரியவந்தது. பின்னா்,திருப்பத்தூா் நகர போலீஸாா் வழக்குப்பதிவு செய்து சந்திரகாந்தன், மதியழகன், இளங்கோவன், ரமேஷ் ஆகிய 4 பேரை கைது செய்தனா். மேலும் சந்திரகாந்தன் குழந்தையை யாரிடம் இருந்து பெற்றாா் அல்லது கடத்தல் கும்பலிடம் இருந்து வாங்கினாரா என்பது குறித்தும் விசாரணை நடைபெறுகிறது.