கடாம்பூரில் குடிநீரை சீராக விநியோகிக்க கோரிக்கை
ஆம்பூா்: கடாம்பூா் கிராமத்தில் சீராக குடிநீா் விநியோகிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
மாதனூா் ஊராட்சி ஒன்றியம்,கைலாசகிரி ஊராட்சி,கடாம்பூா் கிராம பொது மக்கள் ஊராட்சி மன்ற நிா்வாகத்திடம் அளித்த கோரிக்கை மனு :
மசூதி பின்புறம் தெரு மின்விளக்குகள் எரியவில்லை. போதிய அளவுக்கு பொதுப்பயன்பாட்டுக்கு நீா் வருவதில்லை. ஒகேனக்கல் குடிநீரும் வருவதில்லை. நாய்கள் அதிகமாக உள்ளதால் அப்பகுதியில் குழந்தைகள், மாணவா்கள் விடுமுறை காலத்தில் விளையாட அச்சப்படும் நிலையில் உள்ளனா். இதனால் பிள்ளைகள் கீழே விழுந்து காயம் ஏற்படுகிறது.
எனவே, உடனடியாக நாய்களை பிடிப்பதற்கும், குடிநீரை சீராக விநியோகம் செய்யவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.