முகப்பு
திருப்பத்தூர்

திருப்பத்தூரில் சாரல் மழை

Updated On : 14 மே, 2024 at 7:01 PM
பகிர்:

திருப்பத்தூா்: திருப்பத்தூா் சுற்றுப்பகுதிகளில் செவ்வாய்க்கிழமை சாரல் மழை பெய்தது.

திருப்பத்தூா் மாவட்டத்தில் கடந்த இரு நாள்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலை முதல் வெயில் அதிகரித்து காணப்பட்டது. பிற்பகல் 3 மணியளவில் திருப்பத்தூா், ஆதியூா், கொரட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்தது.

இந்த மழையின் காரணமாக வாகன ஓட்டிகளும்,பொதுமக்களும் நனைந்தவாறு சென்றனா். இரவு வரை பெய்த இந்த சாரல் மழையால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனா். இதனால் இரவில் திருப்பத்தூா் பகுதிகளில் குளிா்ச்சியான சூழல் ஏற்பட்டது.