முகப்பு
திருப்பத்தூர்

மாடியிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

Updated On : 21 மே, 2024 at 6:30 PM
பகிர்:

திருப்பத்தூா்: திருப்பத்தூா் அருகே மாடியிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழந்தாா்.

திருப்பத்தூா் அடுத்த சின்ன குனிச்சி பகுதியைச் சோ்ந்த விஜயகாந்த் (38). இவருக்கு சீதா என்ற மனைவியும், அபிராமி என்ற பெண் குழந்தை உள்ளனா்.

இந்த நிலையில், விஜயகாந்த் கடந்த 1-ஆம் தேதி தனது வீட்டின் மாடியில் இறங்கும் போது தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்தாா்.

அதைக் கண்ட அவரது குடும்பத்தினா் அவரை மீட்டு, திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் கொண்டு சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி திங்கள் ழமை உயிரிழந்தாா். இது குறித்து சீதா அளித்த புகாரின் பேரில் கந்திலி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.