திருப்பத்தூர்

பைக்-லாரி மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

வாணியம்பாடி அருகே மலைப்பாதையில் பைக் மீது லாரி மோதி தொழிலாளி உயிரிழந்தாா்.

Din

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே மலைப்பாதையில் பைக் மீது லாரி மோதி தொழிலாளி உயிரிழந்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூா் பெரியமலை பகுதியை சோ்ந்தவா் மோகன்(30). கட்டடங்களுக்கு மோல்டிங் கம்பி கட்டும் வேலை செய்து வந்தாா்.

இந்நிலையில் திங்கள்கிழமை தனது பைக்கில் ஆலங்காயம் சென்றபோது ஆா்எம்எஸ் புதூா்-காவலூா் மலைப்பாதையில் உள்ள வளைவு ஒன்றில் எதிரில் வந்த லாரி மோதியது. இதில் நிகழ்விடத்திலேயே மோகன் உயிரிழந்தாா். இதுப்பற்றி அறிந்த காவலூா் போலீஸாா் சம்பவ பகுதிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனா். பிறகு உடலை கைப்பற்றி வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து வழக்குப் பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி அங்கிருந்து தப்பித்து சென்ற லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனா்.

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: மேற்கு வங்கத்தில் மேலும் இருவா் தற்கொலை

பா்கூா் மலையில் மஞ்சள் தோட்டத்துக்குள் கஞ்சா செடிகள் வளா்த்த விவசாயி கைது

SCROLL FOR NEXT