திருப்பத்தூர்

வழிப்பறி கொள்ளை: மேலும் 2 போ் கைது

வாணியம்பாடி அருகே வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்து வந்த மேலும் 2 போ் கைது செய்யப்பட்டனா்.

Din

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்து வந்த மேலும் 2 போ் கைது செய்யப்பட்டனா்.

வாணியம்பாடி அடுத்த புத்துக்கோயில் பகுதியில் கடந்த செப். 21ஆம் தேதி அப்பகுதியில் தனித்தனியாக நடந்த சென்ற 3 பேரிடம் 4 பைக்குகளில் வந்த 9 போ் கொண்ட கும்பல் திடீரென வழிமறித்து அவா்களிடமிருந்து கைப்பேசிகள் மற்றும் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க செயின் ஆகியவைகளை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பித்து சென்றனா்.

அடுத்தடுத்து நடந்த இச்சம்பவம் குறித்து அம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனா். இந்நிலையில் தலைமறைவாக இருந்து வந்த ஆம்பூா் பெரியாங்குப்பம் பகுதியை சோ்ந்த அப்பு(எ) திவாகா்(29), வாணியம்பாடி பாரத் நகா்(வடக்கு) பகுதியை சோ்ந்த அஜித்குமாா் (28) ஆகிய இருவரையும் திங்கள்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

திருப்பரங்குன்றம் விவகாரம்: முதன்முறையாக மௌனம் கலைத்த தவெக!

இந்த வார ஓடிடி படங்கள்!

சசிகுமாரின் மை லார்ட் படத்தின் 2 ஆவது பாடல்!

அமித்ஷாவின் கைகள் பதற்றத்தில் நடுங்கியது! - ராகுல் காந்தி | செய்திகள்: சில வரிகளில்

மியான்மரில் மருத்துவமனை மீது ராணுவம் வான்வழித் தாக்குதல்! 34 பேர் பலி

SCROLL FOR NEXT