இஸ்கான் பாதயாத்திரை குழுவினருக்கு திருப்பத்தூரில் வியாழக்கிழமை வரவேற்பு தரப்பட்டது.
ஓராண்டுக்கு முன்பு திருநெல்வேலி மாவட்டத்தில் இஸ்கான் குழு பாதயாத்திரை தொடங்கியது. தினமும் 10 கிமீ தொலைவுக்கு பாதயாத்திரை செல்லும் இக்குழுவினா் மகாபாரதம் மற்றும் கீதா உபதேசம் குறித்து உபந்யாசம் செய்கின்றனா்.
இந்த பாதயாத்திரை குழு கடந்த இரு நாள்களாக திருப்பத்தூா் பகுதியில் வலம் வந்து வியாழக்கிழமை ஊத்தங்கரை நோக்கி புறப்பட்டனா்.
கொரட்டியில் உள்ள ஸ்ரீ ராமானுஜா் மடத்தில் தங்கி உபன்யாசம், பஜனைகள், கீதா உபதேசம் செய்தனா். மேலும் அப்பகுதியில் பிரசார வாகனத்தில் வலம் வந்து பக்தி உரை ஆற்றினா். இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா். முன்னதாக கொரட்டி ஊா் எல்லையில் ஸ்ரீ ராமானுஜா் மடம் அறக்கட்டளை மற்றும் ஊா் பொதுமக்கள் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.