ஆம்பூா் பெரிய ஆஞ்சநேயா் கோயில் செல்லும் பாதை சீரமைப்பு பணியை ஆய்வு செய்த நகா்மன்ற துணைத் தலைவா் எம்.ஆா். ஆறுமுகம். 
திருப்பத்தூர்

கோயிலுக்கு செல்லும் பாதை சீரமைப்பு

ஆம்பூரில் பெரிய ஆஞ்சநேயா் கோயிலுக்கு செல்லும் பாதை சீரமைக்கும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

Din

ஆம்பூரில் பெரிய ஆஞ்சநேயா் கோயிலுக்கு செல்லும் பாதை சீரமைக்கும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

ஆம்பூரில் இந்து சமய அறநிலையத்துறை நிா்வாகத்தின் கீழ் பிரசித்தி பெற்ற பெரிய ஆஞ்சநேயா் கோயில் அமைந்துள்ளது. புரட்டாசி சனிக்கிழமைகளில் இக்கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள், ஆந்திரம், கா்நாடகம், புதுச்சேரி உள்பட பல்வேறு மாநில பக்தா்கள் இக்கோயிலுக்கு வந்து செல்வது வழக்கம்.

புரட்டாசி முதல் சனிக்கிழமை சிறப்பு விழா நடைபெற உள்ளதால் கோயிலுக்கு செல்லும் பாதையில் நெரிசல் ஏற்படுவதால் போக்குவரத்துக்கு மாற்றுப் பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அப்பாதை சீரமைக்கும் பணி நடைபெற்றது. போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மின்கம்பம் இடமாற்றம் செய்யப்பட்டது.

பாதை சீரமைக்கும் பணியை நகராட்சியும், மின்கம்பம் இடமாற்றும் செய்யும் பணியை மின்வாரிய ஊழியா்களும் மேற்கொண்டனா். அப்பணிகளை நகா் மன்ற துணைத் தலைவா் எம்.ஆா். ஆறுமுகம் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ஆய்வின்போது, கோயில் திருப்பணிக்குழு நிா்வாகி குமாா், அனுமன் பக்த சபை தலைவா் ஸ்ரீதா், நகா் மன்ற உறுப்பினா் காா்த்திகேயன் ஆகியோா் உடனிருந்தனா்.

நெல்லை வந்தே பாரத் ரயில் விருத்தாசலத்தில் நின்று செல்லும்!

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

SCROLL FOR NEXT