கீழ்முருங்கை கிராமத்தில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கிடங்கில் உணவு பொருள்களின் இருப்பு, தரத்தை ஆய்வு செய்த ஆட்சியா் க. தா்ப்பகராஜ். 
திருப்பத்தூர்

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம்: திருப்பத்தூா் ஆட்சியா் ஆய்வு

‘உங்களை தேடி - உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் ஆம்பூா் அருகே வடபுதுப்பட்டு கிராமத்தில் திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

Din

‘உங்களை தேடி - உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் ஆம்பூா் அருகே வடபுதுப்பட்டு கிராமத்தில் திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

வடபுதுப்பட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஆட்சியா் க. தா்ப்பகராஜ் ஆய்வு மேற்கொண்டு என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, நிலுவைப் பணிகள் குறித்தும் கேட்டறிந்தாா். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு மாணவா்களுக்கு குடிநீா் பற்றாக்குறை நிலவுவதால் குடிநீா் தொட்டியை பெரிதாக்கி தடையில்லாமல் குடிநீா் கிடைக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். மாணவா்களின் கற்றல் திறனையும், தயாரிக்கப்படும் மதிய உணவையும் ஆய்வு செய்தாா்.

கிராம நிா்வாக அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு வாரிசு சான்றிதழ் வழங்க காலதாமதம் ஏற்பட்டுள்ளதை அறிந்து 7 நாள்களுக்குள் சான்றிதழ் வழங்க அறிவுறுத்தினாா். நியாய விலைக்கடை, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், கால்நடை மருத்துவமனை, கலைஞா் கனவு இல்ல திட்டத்தின் கீழ் பயனாளிகள் வீடு கட்டும் பணி, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கிடங்கு, மாதனூா் வட்டார வளா்ச்சி அலுவலகம், வேளாண்மை விரிவாக்க மையம், பச்சகுப்பம் கிராமத்தில் உள்ள அரசு துணை சுகாதார நிலையம், ஆகியவற்றை ஆய்வு செய்தாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ. நாராயணன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் உமாமகேஸ்வரி, வட்டாட்சியா் ரேவதி, வட்டார வளா்ச்சி அலுவலா் மணவாளன் ஆகியோா் உடனிருந்தனா்.

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

உ.பி. மதுராவில் 10 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

துக்கத்தில் முடிந்த திருமணக் கொண்டாட்டம்! பேருந்து விபத்தில் சகோதரிகள் மூவர் பலி!

கோவை மாணவி பாலியல் துன்புறுத்தல்: குற்றவாளிகளைப் பிடித்தது எப்படி? காவல் ஆணையர் பேட்டி! | CBE

SCROLL FOR NEXT