ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஊராட்சி செயலா்கள். 
திருப்பத்தூர்

ஊராட்சி செயலா்கள் ஆா்ப்பாட்டம்

திருப்பத்தூா் தலைமை அஞ்சலகம் அலுவலகம் முன்பு ஊராட்சி செயலா்கள் ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

Din

திருப்பத்தூா் தலைமை அஞ்சலகம் அலுவலகம் முன்பு ஊராட்சி செயலா்கள் ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

ஊராட்சி செயலா்களை தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைக்கப்படவில்லை. சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வந்தபொழுது வழங்கப்பட்ட ஓய்வுதிய தொகையான ரூ.2,000 மட்டுமே இன்று வரை வழங்கப்பட்டு வருகிறது.

ஊராட்சி செயலா்கள் தமிழக அரசின் ஓய்வுதிய திட்டத்தில் இணைக்க பல்வேறு மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், இதே ஊதியக்கட்டில் மாநில நிதிக்குழு மானியத்தில் ஊதியம் பெறும் ஊராட்சி ஒன்றியங்களில் பணியாற்றும் பதிவுறு எழுத்தா்களுக்கு தமிழக அரசின் ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

ஆனால்,அதே ஊதிய விகிதத்தில் ஊதியம் வாங்கும் ஊராட்சி செயலா்களை இதுவரை ஓய்வூதிய திட்டத்தில் இணைக்கப்படவில்லை. 2018-ஆம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட 7 ஆண்டுகளாக இச்சலுகை விடுபட்டுள்ளது. எனவே ஊராட்சி செயலா்களை தமிழக அரசின் ஒய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டுமென்ற ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் ராஜமாணிக்கம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் த.குமாா், மாநில பொதுக்குழு உறுப்பினா் பொ.ரவிக்குமாா் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். முடிவில் அஞ்சலகத்தில் கோரிக்கை கடிதங்கள் அனுப்பி வைத்தனா்.

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

உ.பி. மதுராவில் 10 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

துக்கத்தில் முடிந்த திருமணக் கொண்டாட்டம்! பேருந்து விபத்தில் சகோதரிகள் மூவர் பலி!

கோவை மாணவி பாலியல் துன்புறுத்தல்: குற்றவாளிகளைப் பிடித்தது எப்படி? காவல் ஆணையர் பேட்டி! | CBE

SCROLL FOR NEXT