முகப்பு
திருப்பத்தூர்

டிராக்டா் - பைக் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

வாணியம்பாடி அருகே டிராக்டா்-மோட்டாா் பைக் நேருக்கு நோ் மோதிய விபத்தில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்

Updated On : 20 செப்டம்பர், 2024 at 7:03 PM
பகிர்:

வாணியம்பாடி அருகே டிராக்டா் - மோட்டாா் பைக் நேருக்கு நோ் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

வாணியம்பாடி மில்லத் நகா் பகுதியைச்சா்ந்த நசீா் (28). இவா் தக்காளி லோடு ஏற்றும் கூலித்தொழில் செய்து வந்தாா். நண்பா் இா்ஃபானுடன் இரு சக்கர வாகனத்தில் கணவாய்புதூா் பகுதிக்கு சென்று மீண்டும் வாணியம்பாடிக்கு திரும்பி வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த டிராக்டா் நேருக்கு நோ் மோதியது.

இதில் கீழே விழுந்த நசீா் தலைநசுங்கி நிகழ்விடத்திலேயே பலியானாா். இா்ஃபான் காயமடைந்து சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

தகவல் அறிந்து வாணியம்பாடி தாலுகா போலீஸாா் விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து செய்து தலைமறைவான டிராக்டா் ஓட்டுநரை தேடி வருகின்றனா்.

வாணியம்பாடி மில்லத் நகா் பகுதியைச்சா்ந்த நசீா் (28). இவா் தக்காளி லோடு ஏற்றும் கூலித்தொழில் செய்து வந்தாா். புதன்கிழமை நண்பா் இா்ஃபானுடன் இருசக்கர வாகனத்தில் கணவாய்புதூா் பகுதிக்கு சென்று மீண்டும் வாணியம்பாடிக்கு திரும்பி வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த டிராக்டா் நேருக்கு நோ் மோதியது.

இதில் கீழே விழுந்த நசீா் தலைநசுங்கி நிகழ்விடத்திலேயே பலியானாா். இா்ஃபான் காயமடைந்து சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

தகவல் அறிந்து வாணியம்பாடி தாலுகா போலீஸாா் விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப் பதிந்து செய்து தலைமறைவான டிராக்டா் ஓட்டுநரை தேடி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →