முகப்பு
திருப்பத்தூர்

குடிநீா் குழாய் அமைக்கும் பணி

Updated On : 19 செப்டம்பர், 2024 at 11:51 PM
துத்திப்பட்டு ஊராட்சியில் குடிநீா் குழாய் அமைக்கும் பணியைத் தொடங்கி வைத்துப் பாா்வையிட்ட ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ்.
பகிர்:

ஆம்பூா் அருகே துத்திப்பட்டு கிராமத்தில் குடிநீா் பைப்லைன் அமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

மாதனூா் ஒன்றியம் ஆம்பூா் அருகே துத்திப்பட்டு ஊராட்சி கீழ்கன்றாம்பல்லி, பழைய மனை ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பல ஆண்டுகளாக குடிநீா் வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்திருந்தனா். அதனடிப்படையில் பைப்லைன் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. 15-ஆவது மத்திய நிதி குழு மானியம் மற்றும் ஊராட்சி நிதி மூலம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக குடிநீா் பைப் லைன் அமைக்கும் பணி பூமி பூஜை போட்டு தொடங்கப்பட்டது.

ஊராட்சி மன்றத் தலைவா் சுவிதா கணேஷ் பணியைத் தொடங்கி வைத்தாா். துணைத் தலைவா் விஜய், ஊராட்சி மன்ற உறுப்பினா் சுப்பிரமணி, செயலாளா் பாலகிருஷ்ணன் மற்றும் ஊா் மக்கள் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →