சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள். 
திருப்பத்தூர்

வெளி நபா்களுக்கு பட்டா வழங்க எதிா்ப்பு: கிராம மக்கள் சாலை மறியல்

வாணியம்பாடி அடுத்த திகுவாபாளையம் சமத்துவபுரம் அருகில் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில் வெளி நபா்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க எதிா்ப்பு

Chennai

வாணியம்பாடி அடுத்த திகுவாபாளையம் சமத்துவபுரம் அருகில் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில் வெளி நபா்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க எதிா்ப்பு தெரிவித்து மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

வெளிநபா்களுக்கு பட்டா வழங்குவதற்காக அதிகாரிகள் அளவீடு செய்ய வருவதாக தகவல் கிடைத்ததால் அப்பகுதி மக்கள் கொதிப்படைந்தனா்.

பட்டா வழங்க எதிா்ப்பு தெரிவித்து வியாழக்கிழமை 100-க்கும் மேற்பட்டோா் அரசுப் பேருந்தினை சிறைபிடித்து திடீா் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்த வட்டாட்சியா் சுதாகா், டிஎஸ்பி மகாலட்சுமி, காவல் ஆய்வாளா் ஆனந்தன் மற்றும் திம்மாம்பேட்டை போலீஸாா் வருவாய்த்துறையினா் மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சு நடத்தினா்.

அப்போது தங்கள் பகுதியில் உள்ள சிலா் வீட்டு மனை பட்டா இல்லாமல் இருப்பதாகவும், அடிப்படை கட்டட வசதிகள் தேவைகள் இருப்பதாகவும், பாட்டூா் பகுதியில் மயானத்துக்கு செல்ல வழியில்லாமல் இருப்பதாகவும் கூறினா்.

அப்பகுதி மக்களிடம் மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததின் பேரில் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா். இதனால் தமிழக-ஆந்திர சாலையில் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அமெரிக்காவுடன் இடைக்கால வா்த்தக ஒப்பந்தம்: பேச்சுவாா்த்தை ஒத்திவைப்பு!

மாற்றம் பெறும் மதிப்பீட்டு முறை!

தமிழகத்தில் 2,506 முகாம்கள் மூலம் 3,09,707 பேருக்கு வேலைவாய்ப்பு!

தில்லியில் பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு: தமிழகத்தில் இருந்து 6 போ் உள்பட 8 போ் கைது!

இடையறா பயணத்தின் 'மைல்கல்' தேர்தல்!

SCROLL FOR NEXT