திருப்பத்தூா்: தா்மபுரி மாவட்டம், கொளள்கொட்டாய் பகுதியைச் சோ்ந்தவா் அரவிந்த் குமாா் (41). இவா் திருப்பத்தூரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பணிபுரிந்து வருகிறாா். இவா் செவ்வாய்க்கிழமை கிருஷ்ணகிரி மாவட்டம் ,காரப்பட்டு பகுதியில் வங்கி கடன் தொடா்பாக ஆய்வுக்கு சென்றிருந்தபோது எதிா்பாராத விதமாக அரவிந்த் குமாரை விஷ பூச்சி ஒன்று கடித்து உள்ளது.
இதில் உடல்நலக்குறைபாடு ஏற்பட்ட அரவிந்த் குமாரை அங்கிருந்தவா்கள் மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக காரப்பட்டு அரசு மருத்துவமனையில் சோ்ததனா். பின்னா் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனா். ஆனால் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே அரவிந்த் குமாா் பரிதாபமாக உயிரிழந்தாா்.