திருப்பத்தூர்

இளைஞா்கள் மீது தாக்குதல்: 5 போ் கைது

திருப்பத்தூா் அருகே கைப்பேசியில் பேசியதாக தாக்கப்பட்ட வழக்கில் 5 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா் அருகே கைப்பேசியில் பேசியதாக தாக்கப்பட்ட வழக்கில் 5 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பத்தூா் அடுத்த கசிநாயக்கன்பட்டி பகுதியைச் சோ்ந்தவா்கள் அன்பு சிவன்(21), சந்தோஷ் (19). இவா்கள் புதன்கிழமை காா்த்திகை தீபத்தை முன்னிட்டு, பெரியாா் நகரில் உள்ள ஆலமரத்து மாரியம்மன் கோயிலில் பந்தல் அமைத்துக் கொண்டு இருந்தனா். அப்போது 2 பேரும் கைப்பேசியில் சப்தமாக தனது நண்பா்களிடம் பேசிக் கொண்டு இருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சோ்ந்த மதன்குமாா் (21), அன்புசிவன் மற்றும் சந்தோஷை பாா்த்து இங்கு இப்படி சப்தமாக பேசக்கூடாது எனக் கூறியதாக தெரிகிறது.

இதனால் இரு தரப்புக்கும் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த மதன்குமாா் அதே பகுதியைச் சோ்ந்த யாதவன் (22), அஜீபா(19), சுந்தா் (24) மற்றும் சிரஞ்சீவி (23)ஆகிய 4 பேரை அழைத்து வந்து அன்புசிவன் மற்றும் சந்தோஷை தாக்கினராம்.

இது குறித்து சந்தோஷ் திருப்பத்தூா் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் மேற்கண்ட யாதவன் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனா்.

ரிஷப ராசிக்கு மகிழ்ச்சி: தினப்பலன்கள்!

ராணிப்பேட்டை தொழிற்பேட்டையில் குவிந்துள்ள குரோமியக் கழிவுகளை அகற்றக்கோரி பாமக ஆா்ப்பாட்டம்

வெற்றிகரமான எதிர்நீச்சல்!

தேர்தல் போட்டி தீர்வாகுமா?

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா நினைவு நாள்: அதிமுகவினா் அஞ்சலி

SCROLL FOR NEXT