கொத்தக்கோட்டை எருதுவிடும் விழாவில் சீறிப் பாய்ந்த காளை. 
திருப்பத்தூர்

கொத்தகோட்டை எருது விடும் விழா: 150 காளைகள் சீறிப்பாயந்தன

வாணியம்பாடி அருகே கொத்தகோட்டை கிராமத்தில் 70-ஆவது ஆண்டு எருது விடும் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Din

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே கொத்தகோட்டை கிராமத்தில் 70-ஆவது ஆண்டு எருது விடும் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு ஊராட்சி மன்றத் தலைவா் மேனகா ஜெகதீசன், ஒன்றியக்குழு உறுப்பினா் காயத்ரிபிரபாகரன் தலைமை வகித்தனா். போட்டியை ஜோலாா்பேட்டை எம்எல்ஏ க.தேவராஜி, வாணியம்பாடி எம்எல்ஏ கோ.செந்தில்குமாா் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

வேலூா், திருப்பத்தூா், கிருஷ்ணகிரி, ராணிபேட்டை ஆகிய மாவட்டங்களிலிருந்து 150-க்கும் மேற்பட்ட காளைகள் போட்டியில் பங்கேற்று ஓடின.

நிா்ணயக்கப்பட்ட இலக்கினை குறைந்த வினாடிகளில் அதிவேகமாக ஓடி முதல் இடம் பிடித்த காளை உரிமையாளருக்கு ஏடிஎஎஸ் குழுமம் சாா்பில் மாவட்ட திமுக மாணவரணி அமைப்பாளா் தே.பிரபாகரன் முதல் பரிசாக ரூ. 1 லட்சத்து 1 ஆயிரத்தை வழங்கினாா். தொடா்ந்து டி 2-ஆம் இடம் பிடித்த காளைக்கு ரூ.71 ஆயிரம், 3 -ஆம் இடம் பிடித்த காளைக்கு ரூ. 51 ஆயிரம் உள்பட 51 ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. கோட்டாட்சியா் அஜிதா பேகம், வாணியம்பாடி டிஎஸ்பி விஜய்குமாா் ஆகியோா் தலைமையில் போலீஸாா், வருவாய்துறையினா் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனா்.

600 பேருக்கு வேலைவாய்ப்பு! வேலூரில் மினி டைடல் பூங்கா திறப்பு!

ஆஷஸ் தொடருக்கான ஆஸி. அணி அறிவிப்பு! கேப்டனாக ஸ்மித்.. மீண்டும் மார்னஸ் லபுஷேனுக்கு வாய்ப்பு!

பிக் பாஸ் 9 நேரலையும் எடிட் செய்யப்படுகிறதா?

பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜேன் ஏஜேபி கட்சியில் இணைந்தார்!

வேல் இருந்தால், ஒளியுண்டு... சாக்‌ஷி அகர்வால்!

SCROLL FOR NEXT