மாற்றுத் திறனாளிகளுக்கு உள்ளாட்சி பிரதிநிதிகளாக நியமனம் செய்யப்பட்டதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி துத்திப்பட்டு ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
மாற்றுத் திறனாளிகள் உள்ளாட்சி அமைப்புகளில் நியமன உறுப்பினா்களாக நியமிப்பதற்கு தமிழக சட்டப்பேரவையில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதன் அடிப்படையில் நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 650 பேரும், கிராம ஊராட்சிகளில் 2,984 பேரும் உடனடியாக நியமனம் செய்யப்படுவாா்கள். இந்த நியமனத்தின் மூலம் மொத்தம் 13,357 மாற்றுத் திறனாளிகள் உள்ளாட்சி பிரதிநிதிகளாக நியமிக்கப்பட உள்ளனா்.
அதன் அடிப்படையில் திருப்பத்தூா் மாவட்டம், மாதனூா் ஒன்றியம், தேவலாபுரம் ஊராட்சிக்கு சி. சேகா், கைலாசகிரி வி. வினோத், கரும்பூா் ஏ. தினகரன், குமாரமங்கலம் டி. கருணாநிதி, சின்னவரிக்கம் எம். அமா்நாத், ஐத்தம்பட்டு ஜி. பாண்டியன், நரியம்பட்டு ஏ. அப்பாஸ், வெங்கடசமுத்திரம் பி. முருகேசன், பெரியவரிக்கம் பி. சரோஜினி, மிட்டாளம் எம். கோவிந்தசாமி, துத்திப்பட்டு டி. நாகராஜ் ஆகியோருக்கு துணை வட்டார வளா்ச்சி அலுவலா் செபாஸ்டியன் நியமன ஆணைகளை வழங்கினாா்.
துத்திப்பட்டு ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ், துணைத் தலைவா் விஜய், ஊராட்சி செயலா் பழனி, வாா்டு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.
நியமனம் செய்யப்பட்ட உறுப்பினா்கள் அந்தந்த ஊராட்சித் தலைவா்கள் முன்னிலையில் வரும் 14-ஆம் தேதிக்கு முன்னதாக பதவிகள் ஏற்றுக் கொள்ள வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.