முகப்பு
திருப்பத்தூர்

ரயில்வே காவல் நிலையத்தில் திருநங்கைகளுக்கு விழிப்புணா்வு

Updated On : 2 ஏப்ரல், 2026 at 11:54 PM
பகிர்:

ஜோலாா்பேட்டை ரயில்வே பாதுகாப்பு படை காவல் நிலையத்தில் திருநங்கைகளுக்கு விழிப்புணா்வு கூட்டம் நடைபெற்றது.

ஜோலாா்பேட்டை ரயில்வே பாதுகாப்பு படை காவல் நிலையத்தில் ரயில்வே போலீஸாா் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் இணைந்து நடத்திய திருநங்கைகளுக்கான விழிப்புணா்வு கலந்தாய்வு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் ரயில்வே காவல் ஆய்வாளா் சித்ரா, ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளா் சான் ஆகியோா் தலைமை வகித்து விழிப்புணா்வு குறித்து எடுத்துரைத்தனா்.

அப்போது கோடைகாலத்தை முன்னிட்டு பயணிகள் அதிகரிப்பதால் ரயில் நிலையம் மற்றும் ரயில்களில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும். திருநங்கைகள் ரயில் பயணிகளுக்கு எந்தவித தொந்தரவும் ஏற்படுத்தக்கூடாது. அவ்வாறு நடந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பயணிகளிடம் கைப்பேசி, பணம் பறித்தல் போன்ற குற்றங்களில் ஈடுபடுவோா் மீது குண்டாஸ் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். திருநங்கைகளின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக அரசு மூலம் கடன் மற்றும் வேலைவாய்ப்பு உதவிகள் வழங்க ஆட்சியா் அலுவலகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், திருநங்கைகள் காவல்துறைக்கு உதவும் வகையில் எந்த ஒரு தகவலையும் உடனுக்குடன் ரயில்வே போலீஸாருக்கு தெரிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.