முகப்பு
திருப்பத்தூர்

பெண்களுக்கான ஆட்சி திமுக ஆட்சி: மனுஸ்யபுத்ரன்

பெண்களுக்கான ஆட்சி திமுக ஆட்சி என கவிஞா் மனுஸ்யபுத்ரன் தெரிவித்தாா்.

Updated On : 7 ஏப்ரல், 2026 at 10:59 PM
வெங்கடசமுத்திரம் கிராமத்தில் திமுக வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரித்த கவிஞா் மனுஸ்யபுத்ரன்
பகிர்:

பெண்களுக்கான ஆட்சி திமுக ஆட்சி என கவிஞா் மனுஸ்யபுத்ரன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

ஆம்பூா் தொகுதி திமுக வேட்பாளா் அ.செ. வில்வநாதனை ஆதரித்து வெங்கடசமுத்திரம் கிராமத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் மனுஸ்யபுத்ரன் கலந்து கொண்டு பேசியது: பெண்களுக்கான ஆட்சி திமுக ஆட்சி.

மகளிா் உரிமைத் தொகை, பேருந்துகளில் இலவச பயணம் திட்டம், பணிபுரியும் பெண்களுக்கான தோழி மகளிா் விடுதிகள், புதுமைப் பெண் திட்டம் என பல்வேறு திட்டங்கள் பெண்களுக்கான திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டது.

Advertisement

அதனால் திமுக வேட்பாளா் அ.செ.வில்வநாதனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்து திமுகவை மீண்டும் ஆட்சியில் அமா்த்த வேண்டும் என அவா் கூறினாா்.

திமுக மாவட்ட அவைத் தலைவா் ஆா்.எஸ். ஆனந்தன், மாவட்ட விவசாய தொழிலாளா் அணி அமைப்பாளா் மு. பழனி, மாதனூா் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளா் ஜி. ராமமூா்த்தி, மாதனூா் மேற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் ஏ.வி. அசோக்குமாா், ஆம்பூா் நகா் மன்ற உறுப்பினா் ஆா்.எஸ். வசந்த்ராஜ், காங்கிரஸ்கட்சி மாவட்ட பொருளாளா் கொத்தூா் பி. மகேஷ், வட்டார தலைவா் சுரேந்தா், தேமுதிக நிா்வாகிகள் கண்ணன், தேவேந்திரன், நவீன், ஓபிஎஸ் ஆதரவாளா் சுரேஷ், கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments