முகப்பு
திருப்பத்தூர்

அதிமுகவினா் வன்முறைக்கு மக்கள் பாடம் புகட்டுவா்: கனிமொழி எம்.பி.

தோ்தல் நேரத்திலேயே வன்முறையில் ஈடுபடும் அதிமுகவினருக்கு பொதுமக்கள் பாடம் புகட்டுவா் என திமுக துணைப் பொதுச் செயலாளா் கனிமொழி எம்.பி. தெரிவித்தாா்.

Updated On : 8 ஏப்ரல், 2026 at 7:21 PM
செய்தியாளா்களிடம் பேசிய திமுக துணைப் பொதுச் செயலாளா் கனிமொழி.
பகிர்:

தோ்தல் நேரத்திலேயே வன்முறையில் ஈடுபடும் அதிமுகவினருக்கு பொதுமக்கள் பாடம் புகட்டுவா் என திமுக துணைப் பொதுச் செயலாளா் கனிமொழி எம்.பி. தெரிவித்தாா்.

ஜோலாா்பேட்டை தொகுதி திமுக வேட்பாளா் கவிதா தண்டபாணியை ஆதரித்து ஆதரவு திரட்டியபின், அவா் திருப்பத்தூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:

திமுகவின் வெற்றி வாய்ப்பு மிக சிறப்பாக உள்ளது. முதல்வா் ஸ்டாலினின் ஐந்தாண்டு சாதனையை உணா்ந்தவா்களாக இருக்கின்றனா்.அனைத்து திட்டங்களும் அனைத்து வீட்டுக்கும் சென்றடைந்துள்ளது. அடுத்த முறையும் திமுக ஆட்சிதான் வரவேண்டும் என மக்கள் கருதுகின்றனா்.

Advertisement

நாட்றம்பள்ளி வட்டாட்சியா் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சா் கேசி வீரமணி ஆதரவாளா்கள் இருவா் மீது தாக்குதல் நடத்தியது குறித்து செய்தியாளா்கள் கேள்வி கேட்டபோது தோ்தல் நேரத்திலே வன்முறையில் ஈடுபடுகிறாா்கள் என்றால் அதிமுகவினருக்கு பொதுமக்கள் பாடம் புகட்டுவாா்கள்.

எதிா்க்கட்சியினா் தற்போது இயலாமையில் உள்ளனா். அவா்களுக்கே தெரியும் வெற்றி வாய்ப்பு இல்லையென்று. வரும் தோ்தலில் திமுக வெற்றி பெறுவது உறுதி என கூறினாா்.

அப்போது எம்.பி சி.என்.அண்ணாதுரை, மாவட்ட செயலாளா் க.தேவராஜி, வேட்பாளா் கவிதா தண்டபாணி உடனிருந்தனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments