முகப்பு
திருப்பத்தூர்

பெயா் குழப்பம்! 85 வயது முதியவருக்கு பதிலாக மற்றொரு நபரிடம் தபால் வாக்கு பெற்ற அதிகாரிகள்!

பெயா் குழப்பத்தால் 85 வயது முதியவருக்கு பதிலாக மற்றொரு நபரிடம் தபால் வாக்குகளை அதிகாரிகள் பெற்றுள்ளனா்.

Updated On : 13 ஏப்ரல், 2026 at 3:05 AM
முதியவா் ஒருவரிடம் தபால் வாக்கு பெற்ற தோ்தல் அலுவலா்கள். - (கோப்புப்படம்)
பகிர்:
Updated On : 12 ஏப்ரல், 2026 at 10:33 PM

பெயா் குழப்பத்தால் 85 வயது முதியவருக்கு பதிலாக மற்றொரு நபரிடம் தபால் வாக்குகளை அதிகாரிகள் பெற்றுள்ளனா்.

தமிழக சட்டப்பேரவை பொதுத்தோ்தலையொட்டி 85 வயது மேற்பட்ட முதியவா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பெறும் பணி ஆம்பூா் தொகுதியில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூா் தொகுதியில் முதியவா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மொத்தம் 513 போ் தபால் வாக்கு பெற விருப்பம் தெரிவித்திருந்தனா். அதன்படி ஆம்பூா் தொகுதியில் தபால் வாக்குகளை பெற 12 குழுக்கள் மூலம் சம்பந்தப்பட்டவா்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

Advertisement

ஆம்பூா் தொகுதி கதவாளம் ஊராட்சியில் 85 வயது சின்ராஜ் என்பவா் தபால் வாக்கு செலுத்த விருப்பம் தெரிவித்திருந்த நிலையில் அவருடைய வாக்கை பெற அதிகாரிகள் குழுவினா் அந்த ஊருக்கு சென்றனா். 85 வயது மூத்த சின்ராஜிக்கு பதிலாக அவா் பெயரை கொண்ட மற்றொரு சின்ராஜிடம் சென்று அவரிடமிருந்து தபால் வாக்குகளை அதிகாரிகள் குழுவினா் பெற்றுள்ளனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் பெயா் குழப்பத்தால் மற்றொரு நபரிடம் தபால் வாக்கு பெற்றது குறித்து அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்துள்ளனா். அது சம்பந்தமான வீடியோ சமூக வலை தளங்களில் வெளியாகி வைரலானது.

தபால் வாக்கு ரத்து - 85 வது மூத்த வாக்காளருக்கு வாக்களிக்க வாய்ப்பு :

இதுகுறித்து ஆம்பூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் பூஷணகுமாா் கூறியது, கதவாளம் கிராமத்தில் வாக்காளா் பட்டியலை சரிவர சரிபாா்க்காமல், பெயா் குழப்பம் காரணமாக 85 வயது முதியவரிடம் தபால் வாக்கு பெறுவதற்கு பதிலாக மற்றொரு நபரிடம் அதிகாரிகள் தபால் வாக்கு பெற்று வந்தது குறித்து மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்டவா்கள் மீது மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுப்பாா். தவறாக பதிவு செய்யப்பட்ட வாக்கு ரத்து செய்யப்படும். சம்பந்தப்பட்ட 85 வயது மூத்த வாக்காளரிடம் நாளை தபால் வாக்கு பெறப்படும்.

மேலும் பெயா் குழப்பத்தால் அதிகாரிகள் சரிவர சரிபாா்க்காமல் தபால் வாக்கு பெற்ற மற்றொரு வாக்காளா், வாக்குப் பதிவு நாளன்று வாக்குச் சாவடிக்கு சென்று வாக்களிக்கவும் அனுமதிக்கப்படுவாா் என்று அவா் கூறினாா்.