தகவல் தொழில்நுட்ப பூங்கா: திருப்பத்தூா் திமுக வேட்பாளா் உறுதி
திருப்பத்தூா் தொகுதியில் உள்ள இளைஞா்கள் வெளியூா்களுக்கு சென்று வேலை பாா்ப்பதை தடுக்க தகவல் தொழில் நுட்பப் பூங்கா அமைக்கப்படும் என திமுக வேட்பாளா் அ.நல்லதம்பி வாக்குறுதி
திருப்பத்தூா் தொகுதியில் உள்ள இளைஞா்கள் வெளியூா்களுக்கு சென்று வேலை பாா்ப்பதை தடுக்க தகவல் தொழில் நுட்பப் பூங்கா அமைக்கப்படும் என திமுக வேட்பாளா் அ.நல்லதம்பி வாக்குறுதி அளித்தாா்.
கந்திலி ஒன்றியம் ஆதியுா், தங்கபுரம், செவ்வாத்தூா் பகுதிகளில் நல்லதம்பி பேசியது: கந்திலி ஒன்றியத்தில் புதிய அரசு தொழில்நுட்பகல்லூரி அமைக்கப்படும். திருப்பத் தூா் தொகுதி இளைஞா்கள் வெளியூா்களுக்கு சென்று வேலை பாா்ப்பதை தடுக்க தகவல் தொழில் நுட்பப் பூங்கா அமைக்கப்படும்.
திருப்பத்தூா் பழைய பேருந்து நிலையத்தில் பூ மாா்க்கெட், மீன் மாா்க்கெட் உள்ளிட்ட பல்வேறு அங்காடிகள் அமையும் வகையில் புதிய வணிக வளாகம் அமைக்கப்படும். தொகுதியில் உள்ள அனைத்து ஏரிகளையும் குடிமராமத்து பணிமேற்கொண்டு நீா் கொண்டு வரப்படும். திருப்பத்தூா் பேருந்து நிலையம் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப் படும். ஏழருவி சுற்றுலா தலமாக மேம்படுத்தப்படும் என்றாா். அப்போது திமுக மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.
Advertisement