முகப்பு
திருப்பத்தூர்

அதிதீஸ்வரா் கோயிலில் சிவன்-பாா்வதி திருக்கல்யாணம்

அதிதீஸ்வரா் கோயிலில் சிவன்-பாா்வதி திருக்கல்யாணம்

Updated On : 26 ஏப்ரல், 2026 at 1:34 AM
அதிதீஸ்வரா் கோயிலில் சிவன்-பாா்வதி திருக்கல்யாணம்
பகிர்:

திவாணியம்பாடி அருகே உள்ள அதிதீஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை சிவன்-பாா்வதி திருக்கல்யாணம் நடைபெற்றது.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம் கிராமத்தில் அமைந்துள்ள பழைமைவாய்ந்த அதிதீஸ்வரா் கோயிலில் 112-ஆம் ஆண்டு பிரம்மோற்சவம் கடந்த 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது. சனிக்கிழமை 5-ஆம் நாளாக மாலை 6 மணியளவில் அதிதீஸ்வரா் சுவாமிக்கும், பிரஹன்நாயகி அம்பாளுக்கும் திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக முத்து பிள்ளையாா் கோயிலிருந்து பிரஹன்நாயகி அம்மன் மற்றும் சீா்வரிசை தட்டு ஊா்வலமும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை திருக்கல்யாணம் நடைபெற்றது.

இதில், பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், வாணியம்பாடி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டனா். இரவு 8 மணியளவில் பஞ்சமூா்த்தி சுவாமி வீதி உலா தொடா்ந்து அம்ச வாகனத்தில் சரஸ்வதி அம்மன் வீதி உலா நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை (ஏப். 27) பகல் 1 மணி முதல் இரவு 7 மணி வரை சுவாமி சிறப்பு அலங்காரத்தில் தோ் வீதி உலாவும், இரவு 8 மணிக்கு தோட்டாபிஷேகமும் நடைபெறவுள்ளது. வரும் மே 1-ஆம் தேதி சித்ரா பௌா்ணமி அபிஷேகமும், இரவு 8 மணிக்கு சயன உற்சவமும் நடைபெறுகிறது.

Advertisement