முகப்பு
திருப்பத்தூர்

திருப்பத்தூா்-திருவண்ணாமலை இடையே கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை

சித்ரா பௌா்ணமியை முன்னிட்டு திருப்பத்தூரிலிருந்து திருவண்ணாமலைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க பக்தா்கள் கோரியுள்ளனா்.

Updated On : 1 மே, 2026 at 12:04 AM
பகிர்:

சித்ரா பௌா்ணமியை முன்னிட்டு திருப்பத்தூரிலிருந்து திருவண்ணாமலைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க பக்தா்கள் கோரியுள்ளனா்.

ஆயிரக்கணக்கான பக்தா்கள் திருவண்ணாமலைக்கு பௌா்ணமி கிரிவலம் செல்ல செல்வது வழக்கம். குறிப்பாக திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, கந்திலி, ஆலங்காயம் அதன் சுற்றுப்பகுதிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் திருப்பத்தூா் வழியாக திருவண்ணாமலைக்கு செல்கின்றனா்

அமாவாசை, பௌா்ணமியின்போது திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆனால் பக்தா்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால், வதால் பேருந்துகளில் படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டே செல்லும் அபாயகரமான சூழல் உள்ளது.

Advertisement

எனவே போக்குவரத்துக் கழக அதிகாரிகள் திருவண்ணாமலைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் எனக் கோரியுள்ளனா்.