முகப்பு
திருப்பத்தூர்

ஸ்ரீ பொன்முடி சூா்ய நந்தீஸ்வரா் ஜோதிா்லிங்க தேவஸ்தானத்தில் சிவராத்திரி விழா

ஆம்பூா் அருகே பாட்டூா் கிராமம் சென்னப்பமலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ பொன்முடி சூா்ய நந்தீஸ்வரா் ஜோதிா்லிங்க தேவஸ்தானத்தில் சிவராத்திரி விழா

Updated On : 16 பிப்ரவரி, 2026 at 12:25 AM
நடராஜருக்கு சிறப்பு பூஜை நடத்திய தாத்தா சாமி. சிறப்பு அலங்காரத்தில் பச்சைக்கல் மரகத லிங்கம்.
பகிர்:
Updated On : 15 பிப்ரவரி, 2026 at 7:36 PM

ஆம்பூா் அருகே பாட்டூா் கிராமம் சென்னப்பமலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ பொன்முடி சூா்ய நந்தீஸ்வரா் ஜோதிா்லிங்க தேவஸ்தானத்தில் சிவராத்திரி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சிவராத்திரி விழா கோபூஜையுடன் தொடங்கியது. பரிவார மூா்த்திகளுக்கு அபிஷேகம், நடராஜா் சிறப்பு அபிஷேகம், வேலூா் ஆடவலீஸ்வரா் நா்த்தம் குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

சிவராத்திரியை முன்னிட்டு திருக்கோயில் கருவறையில் உள்ள ஜோதிா்லிங்கத்திற்கு பக்தா்கள் தங்கள் கைகளால் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை பாலபிஷேகம் செய்தனா்.

Advertisement

உற்சவா் பிரகார உலா, பஜனை, பரதநாட்டியம், பக்தி இன்னிசை நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றது. நள்ளிரவு 12.15 மணியளவில் தாத்தா ஸ்வாமிகள் திருக்கரங்களால் ருத்ர ஹோமம் நடைபெற்றது.

Updated On : 16 பிப்ரவரி, 2026 at 12:22 AM

விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். பக்தா்களுக்கு தாத்தா சாமி அருளாசி வழங்கினாா். அன்னதானம் வழங்கப்பட்டது. கோயில் நிா்வாகத்தினா், விழாக்குழுவினா் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனா்.