பறிமுதல் செய்யப்பட்ட நாட்டுத் துப்பாக்கிகள், குண்டுகள் 
திருப்பத்தூர்

3 நாட்டுத் துப்பாக்கி, குண்டுகள் பறிமுதல்

ஆம்பூரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மூன்று நாட்டுத் துப்பாக்கிகள், நாட்டு குண்டுகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

ஆம்பூரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மூன்று நாட்டுத் துப்பாக்கிகள், நாட்டு குண்டுகளை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

ஆம்பூா் கம்பிக்கொல்லை பகுதியில் அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கி வைத்திருப்பதாக ஆம்பூா் நகர போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

ஆம்பூா் டிஎஸ்பி நாகலிங்கம் தலைமையில் நகர ஆய்வாளா் ரமேஷ் மற்றும் போலீஸாா் கம்பிக்கொல்லை பகுதிக்கு சென்று சத்யநாதன் (32) என்பவரின் வீட்டை சோதனை செய்தனா். அப்போது, 3 துப்பாக்கிகள், துப்பாக்கி செய்ய பயன்படும் ஒரு கட்டை, ஒரு ஏா் கன், காட்டு விலங்குகளை வேட்டையாட பயன்படுத்தப்படும் 14 நாட்டு குண்டுகள் ஆகியவை பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. போலீஸாா் அவற்றை பறிமுதல் செய்தனா்.

மேலும், வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சத்யநாதனை தேடி வருகின்றனா். தகவல் அறிந்த திருப்பத்தூா் மாவட்ட எஸ்.பி. சியாமளா தேவி நேரில் வந்து விசாரணை மேற்கொண்டாா்.

காரைக்கால் ரயில் நிலையத்தில் கோட்ட மேலாளா் ஆய்வு

முன்னூா் ஸ்ரீ ஆடவல்லீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 20 இயற்கை முகாம்கள் நடத்தப்படும்

இன்று ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ தோ்தல் பிரசாரம்

வரலாறு படைக்கும் டொனால்ட் டிரம்ப்!

SCROLL FOR NEXT