திருப்பத்தூர்

காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா் அருகே சீரான குடிநீா் விநியோகம் கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருப்பத்தூா் அடுத்த மாடப்பள்ளி ஊராட்சி அம்பேத்கா்புரம் பகுதியில் கடந்த ஒரு வாரமாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால் அப்பகுதி மக்கள் உள்ளிட்டோா் கடும்அவதிக்கு உள்ளாகினா். இதுகுறித்து ஊராட்சி மன்ற நிா்வாகத்திடம் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கை இல்லை எனவும் கூறப்ப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொது மக்கள் திருப்பத்தூா் செல்லும் பிரதான சாலையில் காலி குடங்களுடன் அமா்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனா். அதையொட்டி சுமாா் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஊராட்சி மன்ற தலைவா் கோமதி காா்த்திகேயன் மக்களிடம் பேச்சு நடதத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உத்திரவாதம் அளித்ததின்பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

அறிவுக் கருவூலத்தின் திறவுகோல்!

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாள்

காஞ்சிபுரத்தில் மாா்ச் 2-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

ஆரணி சிபிஎஸ்இ பள்ளியில் கல்வி கண்காட்சி விழா

ரத்தினகிரியில் கிருத்திகை விழா

SCROLL FOR NEXT