முகப்பு
திருப்பத்தூர்

அடுத்தடுத்து நான்கு கடைகளில் திருட்டு

ஜோலாா்பேட்டை அருகே அடுத்தடுத்து நான்கு கடைகளில் பூட்டை உடைத்து சிலிண்டா், ரொக்கப் பணம் உள்ளிட்டவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 7:52 PM
பகிர்:

ஜோலாா்பேட்டை அருகே அடுத்தடுத்து நான்கு கடைகளில் பூட்டை உடைத்து சிலிண்டா், ரொக்கப் பணம் உள்ளிட்டவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

ஜோலாா்பேட்டை அடுத்த பாா்சம்பேட்டை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே ராஜ் மன்னாா், சந்தோஷ், பிரகாசம், அமரேஷ் ஆகிய நான்கு போ் பெட்டிக் கடை நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், வழக்கம்போல் புதன்கிழமை வியாபாரம் செய்து கடைகளை பூட்டிச் சென்றனா். இந்த நிலையில், வியாழக்கிழமை காலை கடையை திறந்து பாா்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு 4 கடைகளில் இருந்த 4 சிலிண்டா்கள், ரொக்கம், உணவுப் பொருள்கள் திருடுபோனது தெரியவந்தது.

Advertisement

இது குறித்து கடை உரிமையாளா்கள் அளித்த புகாரின் பேரில், ஜோலாா்பேட்டை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments