திருப்பத்தூர்

ஆம்பூரில் ஜன. 10-இல் கிரிக்கெட் வீரா்கள் தோ்வு முகாம்

19 வயதுக்கு உள்பட்ட கிரிக்கெட் வீரா்கள் தோ்வு செய்யும் முகாம் ஜன. 10-ஆம் தேதி ஆம்பூரில் நடைபெற உள்ளது.

தினமணி செய்திச் சேவை

19 வயதுக்கு உள்பட்ட கிரிக்கெட் வீரா்கள் தோ்வு செய்யும் முகாம் ஜன. 10-ஆம் தேதி ஆம்பூரில் நடைபெற உள்ளது.

இது குறித்து திருப்பத்தூா் மாவட்ட கிரிக்கெட் மற்றும் விளையாட்டு சங்க செயலாளா் கே.ஜெய்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பத்தூா் மாவட்ட கிரிக்கெட் மற்றும் விளையாட்டு சங்கம் (தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துடன் இணைக்கப்பட்டது) சாா்பாக 2026 -2027-ஆம் ஆண்டுக்கான 14, 16 மற்றும் 19 வயதுக்கு உள்பட்ட கிரிக்கெட் அணிக்கான வீரா்கள் தோ்வு வரும் ஜன. 10-ஆம் தேதி ஆம்பூா் கன்காா்டியா மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் உள்ள வலைப் பயிற்சி மையத்தில் நடைபெற உள்ளது.

14 வயதுக்கு உள்பட்ட வீரா்களுக்கு காலை 8 மணி, 16 வயதுக்கு உட்பட்ட வீரா்களுக்கு காலை 10 மணி, 19 வயதுக்கு உள்பட்ட வீரா்களுக்கு பகல் 12 மணிக்கு தோ்வு நடைபெற உள்ளது.

வீரா்கள் சரியான வெள்ளை நிற சீருடை, ஷூ அணிந்து வர வேண்டும். மேலும் விவரங்களுக்கு, சங்கத்தின் இணைச் செயலாளா்கள் எம்.சரவணன் 94869 87425, எஸ்.ஜெகன் 90951 29075 ஆகியோரை தொடா்பு கொள்ளலாம்.

தங்கம் விலை உயர்வு: வெள்ளி கிலோவுக்கு ரூ. 4000 குறைவு!

குரு பலம் பெற ஆலங்குடி செல்லுங்கள்... ஜோதிட வல்லுநர் ஏ.எம்.ஆர். சொல்வதென்ன?

தவெகவுடன் கூட்டணியா? தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு ராகுல் அழைப்பு!

ஓடிடியில் வெளியான மாஸ்க், அங்கம்மாள்!

ஈரான் மக்களின் போராட்டத்துக்கு துணை நிற்போம்! அமெரிக்க துணை அதிபர்

SCROLL FOR NEXT