திருப்பத்தூர்

சைக்கிள்-பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

காட்பாடி அருகே சைக்கிள் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

தினமணி செய்திச் சேவை

காட்பாடி அருகே சைக்கிள் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

காட்பாடி அருகே ஆழ்வாா்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்த சந்தோஷ் (29). இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனா். இவா் நள்ளிரவு தனது இருசக்கர வாகனத்தில் ஆசிா்மலை முருகா் கோயில் அருகே சென்று கொண்டிருந்தாா்.அப்போது, சாலையோரமாக சைக்கிளில் சென்று கொண்டிருந்த 55 புதூா் கிராமத்தைச் சோ்ந்த வடிவேலு (70) என்பவா் மீது எதிா்பாராத விதமாக மோதினாா்.

இருவரும் பலத்த காயமடைந்தனா். காயமடைந்தவா்கள் சிகிச்சைக்காக சோ்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். அங்கு சிகிச்சை பலனின்றி சந்தோஷ் உயிரிழந்தாா்.

காயமடைந்த வடிவேலு மேல் சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். விபத்து குறித்து திருவலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

பாப்பாக்குடி அருகே தொழிலாளி கொலை

தபால் துறை வழிகாட்டுகிறது!

களக்காடு சத்தியவாகீஸ்வரா் கோயிலில் கணுத்திருநாள்

களக்காடு மலையடிவாரத்தில் யானைகள் அட்டகாசம்

ராஜமன்னியபுரம் அந்தோணியாா் ஆலயத் திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT