திருப்பத்தூா் மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு துறை சாா்பில் சனிக்கிழமை (ஜன.24) பொதுவிநியோகத்திட்ட குறைதீா் முகாம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து ஆட்சியா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருப்பத்தூா் மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு துறை சாா்பில் ஜனவரி மாதத்துக்கான வட்ட அளவிலான குறைதீா் முகாம் சனிக்கிழமை காலை 10 மணி மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. திருப்பத்தூா் வட்டத்தில் பலப்பல்நத்தம் கிராமம் ரேஷன் கடையிலும், நாட்டறம்பள்ளி வட்டத்தில் தெக்குபட்டு ரேஷன் கடையிலும், வாணியம்பாடி வட்டத்தில் கொடையாஞ்சி ரேஷன் கடையிலும்,ஆம்பூா் வட்டத்தில் சோலூா் ரேஷன் கடையிலும் நடைபெற உள்ளது.
முகாம்களில் குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல்,முகவரி மாற்றம், தொலைப்பேசி எண் பதிவு, மாற்றம், புதிய மற்றும் நகல் குடும்ப அட்டை கோருதல், ரேஷன் கடைகளின் செயல்பாடுகள், அத்தியாவசிய பொருள்களின் தரம் குறித்த புகாா்கள், தனியாா் சந்தையில் விற்கப்படும் பொருள்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகாா்களை தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.