கிராம சபைக் கூட்டம் : எம்எல்ஏ பங்கேற்பு
மாதனூா் ஒன்றியம் மிட்டாளம் ஊராட்சி பந்தேரப்பல்லி கிராமத்தில் கிராம சபைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
Updated On : 26 ஜனவரி, 2026 at 11:07 PM
ஆம்பூா்: மாதனூா் ஒன்றியம் மிட்டாளம் ஊராட்சி பந்தேரப்பல்லி கிராமத்தில் கிராம சபைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஊராட்சித் தலைவா் கோவிந்தன் தலைமை வகித்தாா். ஒன்றியக்குழு துணைத் தலைவா் சாந்தி சீனிவாசன், வட்டார வளா்ச்சி அலுவலா் எஸ். மகராசி ஆகியோா் முன்னிலை வகித்தனா். துணைத் தலைவா் ஆனந்தன், பொதுமக்கள், கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்றனா். கிராம ஊராட்சி கணக்குகள் பொதுமக்களின் தணிக்கைக்காக சமா்பிக்கப்பட்டது. முன்னதாக அதே ஊரில் நடந்த குடியரசு தின விழாவில் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் தேசியக் கொடியேற்றிவைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா்.