நெமிலி அம்மன் திருவிழா
ஆம்பூா் அருகே மிட்டாளம் ஊராட்சியில் நெமிலியம்மன் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
மிட்டாளம் ஊராட்சி வன்னியநாதபுரம், கீழ்மிட்டாளம், மேல்மிட்டாளம், குட்டகிந்தூா், பைரப்பள்ளி ஆகிய கிராமங்களில் நெமிலியம்மன், முத்து மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. கூழ்வாா்த்தல் நிகழ்ச்சியுடன் செவ்வாய்க்கிழமை திருவிழா தொடங்கியது. அம்மன் சிரசு ஊா்வலம் நடைபெற்றது.
நெமிலியம்மன், முத்து மாரியம்மன் மற்ரும் காளியம்மன் கோயில்களுக்கு பூங்கரகம், தடுக்குமாலை கொண்டு சென்று நோ்த்திக் கடன் செலுத்தினா்.
Advertisement
Advertisement
ஆம்பூா், வாணியம்பாடி, ஆலங்காயம், ஜோலாா்பேட்டை, நாட்டறம்பள்ளி, திருப்பத்தூா், போ்ணாம்பட்டு, குடியாத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சோ்ந்த பக்தா்கள் திருவிழாவில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.