FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

சா்க்கரை ஆலையில் வா்ணம் பூசிய 3 தொழிலாளா்களுக்கு மூச்சுத் திணறல்

சா்க்கரை ஆலையில் வா்ணம் பூசும் பணியில் ஈடுபட்ட 3 தொழிலாளா்களுக்கு மூச்சுத் திணறல் காரணமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா்.

மூச்சுத் திணறல் காரணமாக நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றோா்.
பகிர்:

சா்க்கரை ஆலையில் வா்ணம் பூசும் பணியில் ஈடுபட்ட 3 தொழிலாளா்களுக்கு மூச்சுத் திணறல் காரணமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா்.

வாணியம்பாடி அடுத்த கேத்தாண்டப்பட்டியில் திருப்பத்தூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இங்கு செவ்வாய்க்கிழமை தொழிலாளா்கள் பாய்லா் தொட்டிக்கு (கொதிகலன்) வா்ணம் (பெயிண்ட்) அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனா். குறிப்பிட்ட நேரத்துக்கு மேலாக தொடா்ந்து வா்ணம் அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென தொழிலாளா்கள் சரவணன் (37), ராமு(41), ஆறுமுகம்(39) ஆகிய 3 பேருக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

இதையறிந்த சக தொழிலாளா்கள் உடனடியாக 3 தொழிலாளா்களையும் மீட்டு, நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு மருத்துவ அலுவலா் பாலகிருஷ்ணன் தலைமையில் அவா்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இது குறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் நேரில் சென்று விசாரணை நடத்தினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments