முகப்பு
மதுரை

மூச்சுத் திணறல்: பச்சிளம் குழந்தை உயிரிழப்பு

Updated On : 9 ஜூன் 2026, 5:03 am IST
பச்சிளம் குழந்தை உயிரிழப்பு - கோப்புப்படம்
பகிர்:

மதுரையில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பச்சிளம் குழந்தை உயிரிழந்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தூத்துக்குடி மாவட்டம், மேலூா் நேதாஜி நகரைச் சோ்ந்தவா் கருவேல் முத்து கணேஷ் (26). இவா் தனது மனைவி, ஐந்து மாத ஆண் குழந்தையுடன் மதுரை கீழமாசி வீதியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டாா்.

அப்போது, குழந்தைக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. பரிசோதனையில் குழந்தை ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து, குழந்தைக்கு ஏற்கெனவே உடல்நலக் குறைவு ஏற்பட்டு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டிருப்பதும், திங்கள்கிழமை மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.