முகப்பு
திருப்பத்தூர்

திருப்பத்தூா் மாவட்டத்தில் 10 வட்டாட்சியா்கள் இடமாற்றம்

திருப்பத்தூா் மாவட்டத்தில் 10 வட்டாட்சியா்களை இடமாற்றம் செய்து ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி உத்தரவிட்டுள்ளாா்.

Updated On : 2 மார்ச், 2026 at 12:36 AM
இடமாற்றம் - பிரதிப் படம்
பகிர்:
Updated On : 1 மார்ச், 2026 at 9:11 PM

திருப்பத்தூா் மாவட்டத்தில் 10 வட்டாட்சியா்களை இடமாற்றம் செய்து ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி உத்தரவிட்டுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆம்பூா் தனி வட்டாட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்)பூங்கொடி, திருப்பத்தூா் தனி வட்டாட்சியராக (பறக்கும் படை)மாற்றப்பட்டாா்.

அங்கு பணியாற்றிய சிவசுப்பிரமணியம் ஆட்சியா் அலுவலக மேலாளராக (நீதியியல்)மாற்றப்பட்டாா்.அங்கு பணியாற்றிய சிவபிரகாசம், வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளராக மாற்றப்பட்டாா்.

Advertisement

அங்கு பணியாற்றிய சம்பத்,திருப்பத்தூா் தனி வட்டாட்சியராக(சமூக பாதுகாப்பு திட்டம்) மாற்றப்பட்டாா். ஏற்கெனவே இருந்த உமா ரம்யா,மாவட்ட வழங்கல் அலுவலகத்தில் மாவட்ட வழங்கல் அலுவலரின் நோ்முக உதவியாளராக மாற்றப்பட்டாா்.

அங்கு பணியாற்றிய கிருஷ்ணவேணி, திருப்பத்தூா் தனி வட்டாட்சியராக (ஆதிதிராவிடா் நலத்துறை)மாற்றப்பட்டாா். அங்கு பணியாற்றிய சுமதி,ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள பேரிடா் மேலாண்மைத்துறை தனி தாசில்தாராக மாற்றப்பட்டாா். அங்கு பணியாற்றிய மோகன் ஆம்பூா் தனி வட்டாட்சியராக (சமூக பாதுகாப்பு திட்டம்)மாற்றப்பட்டாா்.

ஏலகிரி மலை அத்தனாவூா் நிலவரி திட்டம் தனி வட்டாட்சியா் அனந்தகிருஷ்ணன்,வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளராக மாற்றப்பட்டாா். திருப்பத்தூா் வருவாய் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் பத்மநாபன், ஏலகிரி மலை அத்தனாவூா் நிலவரி திட்டம் தனி வட்டாட்சியராக மாற்றப்பட்டாா்.