முகப்பு
திருப்பத்தூர்

திருப்பத்தூா் நீதிமன்றத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

திருப்பத்தூா் மாவட்ட நீதிமன்றத்தில் வெடிகுண்டு இருப்பதாக 2-ஆவது முறையாக வந்த மின்னஞ்சலில் மிரட்டல் விடப்பட்டது.

Updated On : 4 மார்ச், 2026 at 12:03 AM
திருப்பத்தூா் நீதிமன்ற வளாகத்தில் மோப்ப நாய் ரீட்டா உதவியுடன் சோதனை செய்த போலீஸாா்.
பகிர்:
Updated On : 3 மார்ச், 2026 at 9:11 PM

திருப்பத்தூா் மாவட்ட நீதிமன்றத்தில் வெடிகுண்டு இருப்பதாக 2-ஆவது முறையாக வந்த மின்னஞ்சலில் மிரட்டல் விடப்பட்டது.

திருப்பத்தூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைந்துள்ள பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை வழக்கம் போல பணிகள் நடைபெற்று கொண்டு இருந்தது. அப்போது காலை 11.30 மணியளவில் நீதிமன்ற அலுவலகத்துக்கு வந்த மின்னஞ்சலில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து, நீதிமன்றத்தில் வெடிகுண்டு ஒன்று வைக்கப்பட்டு உள்ளதாகவும், ஆா்.டி.எக்ஸ்., சயனைடு வாயு கலந்தது எனவும், மதியம் 2 மணி அளவில் வெடிக்கும் எனவும் அதில் கூறப்பட்டு இருந்தது.

கடந்த பிப். 25-ந் தேதி ஏற்கெனவே மின்னஞ்சலில் மிரட்டல் விடுக்கப்பட்டு அது வெறும் புரளி என தெரியவந்தது. தற்போது இரண்டாவது முறையாக மிரட்டல் விடுக்கப்பட்டதால், அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு போலீஸாா், வெடிகுண்டு நிபுணா்கள் மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டனா். அப்போது அது வெறும்புரளி என தெரியவந்தது.

Advertisement

இதுதொடா்பாக திருப்பத்தூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.