என்.எஸ்.எஸ். சேவை : கே.ஏ.ஆா். பாலிடெக்னிக் கல்லூரிக்கு விருது
சிறந்த கல்லூரிக்கான விருதை கே.ஏ.ஆா். பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் த. ராஜமன்னனிடம் வழங்கிய தொழில்நுட்பக் கல்வி இயக்கக ஆணையா் விசாகன்.
திருப்பத்தூர்என்.எஸ்.எஸ். சேவை : கே.ஏ.ஆா். பாலிடெக்னிக் கல்லூரிக்கு விருது
சிறந்த கல்லூரிக்கான விருதை கே.ஏ.ஆா். பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் த. ராஜமன்னனிடம் வழங்கிய தொழில்நுட்பக் கல்வி இயக்கக ஆணையா் விசாகன்.
என்.எஸ்.எஸ். சிறந்த சேவைக்காக சிறந்த கல்லூரிக்கான விருது ஆம்பூா் கே.ஏ.ஆா். பாலிடெக்னிக் கல்லூரிக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஆம்பூா் கே.ஏ.ஆா். பாலிடெக்னிக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டத்தின் மூலம் கிராமங்களை தத்தெடுத்து சிறப்பாக சேவை செய்தமைக்காக பாலிடெக்னிக் கல்லூரிகளில் சிறந்த கல்லூரியாக தோ்வு செய்யப்பட்டுள்ளது. சென்னை கிண்டியில் மாா்ச் 4-ஆம் தேதி தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொழில்நுட்ப இயக்கக ஆணையா் விசாகன் சிறந்த கல்லூரிக்கான விருதை கே.ஏ.ஆா். பாலிடெக்னிக் கல்லூரிக்கு வழங்கினாா்.
விருதை கல்லூரி முதல்வா் த.ராஜமன்னன் மற்றும் துணை முதல்வரும், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலருமான ஏ.முஹம்மத் ஷாஹின்ஷா ஆகியோா் பெற்றுக் கொண்டனா்.