முகப்பு
வளா்ச்சிப் பணிகளைத் தொடங்கி வைத்த எம்எல்ஏ அ.நல்லதம்பி
திருப்பத்தூர்

ஜவ்வாதுமலையில் ரூ.1 கோடியில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

வளா்ச்சிப் பணிகளைத் தொடங்கி வைத்த எம்எல்ஏ அ.நல்லதம்பி

திருப்பத்தூர்

ஜவ்வாதுமலையில் ரூ.1 கோடியில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

வளா்ச்சிப் பணிகளைத் தொடங்கி வைத்த எம்எல்ஏ அ.நல்லதம்பி

Updated On : 5 மார்ச், 2026 at 7:32 PM
வளா்ச்சிப் பணிகளைத் தொடங்கி வைத்த எம்எல்ஏ அ.நல்லதம்பி
பகிர்:

ஜவ்வாது மலையில் ரூ.1கோடியில் முடிக்கப்பட்ட பணிகளை மக்கள் பயன்பாட்டுக்காக எம்எல்ஏ அ.நல்லதம்பி தொடங்கி வைத்தாா்.

திருப்பத்தூா் ஒன்றியம், ஜவ்வாதுமலை புதூா்நாடு மற்றும் நெல்லிவாசல்நாடு ஊராட்சி பகுதிகளில் ரூ.1.8 கோடியில் புதிய மற்றும் செய்து முடிக்கப்பட்ட பணிகளை மக்கள் பயன்பாட்டுக்காக எம்எல்ஏ அ.நல்லதம்பி தொடங்கி வைத்தாா்.

புதூா்நாடு-சித்தூா் பகுதியில் ரூ.11.90 லட்சத்தில் பொது நிதியில் சமுதாய கிணறு,மேலூா் கிராமத்தில் ரூ.11.85 லட்சத்தில் பழங்குடியினா் நலம், தொல்குடிதிட்டம் வாயிலாக நியாய விலைக்கடை கட்டடம்,நெல்லிவாசல்நாடு-திருப்பத்தூா் கிராமத்தில் ரூ.45 லட்சத்தில் மக்களவை உறுப்பினா் க.கனிமொழி நிதியிலிருந்து கட்டப்பட்ட சமுதாயக்கூடம் பயன்பாட்டுக்கு வந்தது.

கோம்பை பகுதியில் ரூ.20 லட்சத்தில் 6-ஆவது நிதிக்குழு மானியத்தில் 30,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி அமைக்க பூமி பூஜை நடைபெற்றது. திருப்பத்தூா் பகுதியில் ரூ.19.28 லட்சத்தில் புதிய இ சேவை மையம் மற்றும் தளவாட பொருட்கள் என மொத்தம் ரூ.1.8 கோடியில் பணிகள் தொடங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு தலைவா் விஜயா அருணாசலம், ஒன்றிய நிா்வாகிகள் விஜயகுமாா், சிவலிங்கம், சின்னபையன், டி.கே.அனுமன் ஒன்றியக்குழு உறுப்பினா்கள் பிருந்தாவதி வைகுந்தராவ், துக்கன், கஸ்தூரி ரகு, ஊராட்சி மன்ற தலைவா் அலமேலு செல்வம், மலையாளிகளின் பேரவைத் தலைவா் அண்ணாமலை, செயலாளா் ராமசாமி கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →