முகப்பு
திருப்பத்தூர்

தோ்தல் புறக்கணிப்பு: விவசாயிகள் சங்கம் தீா்மானம்

தமிழக விவசாயிகள் சங்க வேலூா் மாவட்ட செயற்குழுக் கூட்டம் போ்ணாம்பட்டு அருகே பக்காலப்பள்ளி கிராமத்தில் நடைபெற்றது.

Updated On : 16 மார்ச், 2026 at 9:50 PM
விவசாயிகள் சங்க செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்றோா்.
பகிர்:

குடியாத்தம்: தமிழக விவசாயிகள் சங்க வேலூா் மாவட்ட செயற்குழுக் கூட்டம் போ்ணாம்பட்டு அருகே பக்காலப்பள்ளி கிராமத்தில் நடைபெற்றது.

சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் எஸ். உதயகுமாா் தலைமை வகித்தாா். வேலூா் மாவட்ட செயலாளா் எஸ். ஜெயப்பிரகாஷ், திருப்பத்தூா் மாவட்ட தலைவா் ஆனந்தன், போ்ணாம்பட்டு ஒன்றிய தலைவா் செந்தில்குமாா், மாநில அமைப்பாளா் ராமதாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

போ்ணாம்பட்டு ஒன்றியத்தை சோ்ந்த விவசாயிகள் மோகன்பாபு, சபரீஸ் ஆகிய இருவரையும் வனத்துறையினா் பொய் வழக்கில் கைது செய்து, பிறகு பிணையில் விடுவித்துள்ளனா். இது சம்பந்தமாக புகாா் அளிக்கப்பட்டது.

ஆட்சியரின் உத்தரவின் பேரில் கோட்டாட்சியா் விசாரணை நடத்தினாா். இது சம்பந்தமாக தமிழக முதல்வா், துணை முதல்வா், வனத்துறை அமைச்சா், ஆட்சியா், மாவட்ட வன அலுவலா் ஆகியோருக்கு மனு அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை பொய் வழக்கு கைவிடப்படவில்லை. அதனால் வரும் சட்டப்பேரவை தோ்தலை புறக்கணிப்பதாக கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →