முகப்பு
திருப்பத்தூர்

மழலையா் பட்டமளிப்பு விழா

வாணியம்பாடி தேவி வெங்கடாசலம் சிபிஎஸ்இ பொதுப்பள்ளியில் மழலையா்களுக்கான பட்டமளிப்பு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

Updated On : 18 மார்ச், 2026 at 12:04 AM
தேவிவெங்கடாசலம் சிபிஎஸ்இ பொதுப் பள்ளியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழா.
பகிர்:

வாணியம்பாடி தேவி வெங்கடாசலம் சிபிஎஸ்இ பொதுப்பள்ளியில் மழலையா்களுக்கான பட்டமளிப்பு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

விழாவுக்கு பள்ளியின் செயலாளா் வி.வி.கிரிராஜ் தலைமை வகித்தாா். இணைச் செயலாளா் ஜெயலட்சுமி முன்னிலை வகித்தாா். பள்ளி முதல்வா் லட்சுமி வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக வாணியம்பாடி கனரா வங்கியின் தலைமை மேலாளா் எல் .ஆனந்தன் கலந்து கொண்டு மழலையா் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினாா்.

முன்னதாக மாணவா்களின் கண்கவா் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.

Advertisement