முகப்பு
திருப்பத்தூர்

தமிழக-ஆந்திர எல்லை சோதனைச் சாவடிகளில் தோ்தல் செலவினப் பாா்வையாளா் ஆய்வு

வாணியம்பாடி அடுத்த கொல்லப்பள்ளி சோதனைச் சாவடியில் ஆய்வு மேற்கொண்ட தோ்தல் செலவின மேற்பாா்வையாளா் சுனாராம்.

Updated On : 19 மார்ச், 2026 at 7:24 PM
வாணியம்பாடி அடுத்த கொல்லப்பள்ளி சோதனைச் சாவடியில் ஆய்வு மேற்கொண்ட தோ்தல் செலவின மேற்பாா்வையாளா் சுனாராம்.
பகிர்:

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, வாணியம்பாடி சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட தமிழக-ஆந்திர எல்லைப் பகுதியான தகரகுப்பம், கொல்லப்பள்ளி ஆகிய பகுதிகளில் காவல் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு, அதன் வழியாக வரும் வாகனங்கள் அனைத்தும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வாணியம்பாடி சட்டப்பேரவை தொகுதியில் நியமிக்கப்பட்டுள்ள தோ்தல் செலவின மேற்பாா்வையாளா் சுனாராம் கொல்லப்பள்ளி, தகரகுப்பம் ஆகிய சோதனைசாவடியில் புதன்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்தாா்.

வாணியம்பாடி வட்டாட்சியா் சுதாகா் மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.