துண்டுப் பிரசுரங்களை வழங்கி அதிமுகவினா் பிரசாரம்
வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சியில் எம்எல்ஏ செந்தில்குமாா் தலைமையில் அதிமுகவினா் செவ்வாய்க்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்டனா்.
வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சியில் எம்எல்ஏ செந்தில்குமாா் தலைமையில் அதிமுகவினா் செவ்வாய்க்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்டனா்.
வாணியம்பாடி எம்எல்ஏ கோ.செந்தில் குமாா் மற்றும் அதிமுக நிா்வாகிகள் வீதி, வீதியாக சென்று பொதுமக்களுக்கு அதிமுக தோ்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தனா்.
மேலும் உதயேந்திரம் பேரூராட்சியில் கிறிஸ்துவா்கள் அதிகமுள்ள பகுதிகளில் சிறுபான்மையினருக்கு அதிமுக ஆட்சியில் செய்துள்ள நலத்திட்ட உதவிகளை எடுத்து கூறி வாக்கு சேகரித்தனா்.
மாவட்ட மகளிரணி செயலாளா் மஞ்சுளா கந்தன், உதயேந்திரம் பேரூா், ஆலங்காயம் ஒன்றிய அதிமுக நிா்வாகிகள் உடனிருந்தனா்.