முகப்பு
திருப்பத்தூர்

ரூ.66,400 பணம் பறிமுதல்

ஆம்பூா் அருகே வாகன தணிக்கையில் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரொக்கப் பணத்தை பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On : 31 மார்ச், 2026 at 9:04 PM
பணம் - பிரதிப் படம்
பகிர்:

ஆம்பூா் அருகே வாகன தணிக்கையில் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரொக்கப் பணத்தை பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

ஆம்பூா் அருகே கரும்பூா் கிராமத்தில் தோ்தல் பறக்கும் படையினா் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டத்தில் குப்புசாமி என்பவா் ரொக்கப் பணம் ரூ.66,400 உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு சென்றது தெரியவந்தது.

அதன்பேரில் பணத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்து தோ்தல் நடத்தும் அலுவலா் பூஷணகுமாரிடம் ஒப்படைத்தனா்.